சீனாவின் சாங்’இ-4 விண்கலம், நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்ததில் சில ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளது.
சீனாவின் சாங்’இ-4 விண்கலம், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி, நிலவின் மற்றொரு பகுதியான வோன் கர்மான் என்ற குழிப்பகுதியில் விண்கலன் தரையிறக்கப்பட்டது. விண்கலத்தில் கொண்டு செல்லப்பட்ட ரோவர் யூட்டூ 2 அப்பகுதியில் இன்ஃப்ரா ரெட் கதிர்களின் உதவியுடன் ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலமாக சில தகவல்களை சேகரித்து அனுப்பி உள்ளது.
இந்த ஆய்வில், நிலவில் தரையிறங்கிய பகுதியில் ஆலிவின் மற்றும் பைராக்சீன் போன்ற வேதிபொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இவை நிலவின் ஆழ்ந்த உட்பகுதியில் இருந்து வந்திருக்க கூடும் என கூறப்படுகின்றது. இந்த பைராக்சீன்களில் கால்சியம், சோடியம், இரும்பு 2 மக்னீசியம் ஆகியவை இருக்கும். மிக குறைந்த அளவில் ஸிங்க், லித்தியம் ஆகியவையும் இருக்கும் என்றும், குரோமியம், அலுமினியம், இரும்பு 3 ஸ்கேண்டியம், டைட்டானியம், வனேடியம் போன்றவையும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.